சின்னத்தை வாங்க 2000கோடி ரூபாய் பேரமா? மகாராஷ்டிராவில் நடப்பது என்ன?!!

சிவசேனாவின் பெயரை
சின்னத்தை வாங்க 2000கோடி ரூபாய் பேரமா? மகாராஷ்டிராவில் நடப்பது என்ன?!!
Published on
Updated on
1 min read

சிவசேனா கட்சியின் பெயரையும் அதன் வில் அம்பு சின்னத்தையும் வாங்க ரூ.2000 கோடி பேரம் நடந்ததாக உத்தவ் பிரிவு தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

கணக்காளரா?:

சிவசேனா கட்சியின் பெயரையும் அதன் வில் அம்பு சின்னத்தையும் வாங்க ரூ.2000 கோடி பேரம் நடந்ததாக உத்தவ் அணியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.   இருப்பினும், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியை சேர்ந்த எம்எல்ஏ சதா சர்வாங்கர், ஷிண்டே கூறியதை நிராகரித்து, சஞ்சய் ராவத் எங்களது கணக்காளராக இருக்கிறாரா? எனக் கேட்டுள்ளார்.

பேரமா?:

இதைக் குறித்து சஞ்சய் ராவத் கூறியபோது, ‘2000 கோடி ரூபாய் வழங்கியது என்பது 100 சதவீதம் உண்மையானது.  இந்த தகவலை ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஒருவரே என்னிடம் தெரிவித்தார்.  நான் கூறியதற்கு ஆதாரம் உள்ளது.  அதை விரைவில் வெளிப்படுத்துவேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?:

தேர்தல் ஆணையமானது ஷிண்டே அணியினை உண்மையான சிவசேனா என அங்கீகரித்து, 'வில் அம்பு' தேர்தல் சின்னத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளது.  

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com