கர்நாடகாவில் லிங்காயத்துகளை கவர முயற்சிக்கிறதா பாஜக?

கர்நாடகாவில் லிங்காயத்துகளை கவர முயற்சிக்கிறதா பாஜக?
Published on
Updated on
1 min read

கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பி.எஸ். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார்.  ஆனால் நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வியுற்றதால் 21/2 நாள்களில் பதவியை ராஜினாமா செய்தார்.  அவரை தொடர்ந்து சித்தாராமையா முதலமைச்சரானார்.  அவரும் நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் மீண்டும் எடியூரப்பா முதலமைச்சரானார்.  வயதைக் காரணங்காட்டி அதிருப்தி எழுந்ததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

எதிர்ப்புகளும் சமாதானமும்:

முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா விலகியது அல்லது விலக்கப்பட்டது அவரது விசுவாசிகள் மற்றும் லிங்காயத்துகள் இடையே கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆகஸ்டு முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் எடியூரப்பாவை நேரடியாக சந்தித்து பேசினார்.  அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி தொலைபேசியில் எடியூரப்பாவுடன் பேசியுள்ளார்.  இந்நிலையில்  நாடாளுமன்ற குழு மறுசீரமைக்கப்பட்டு புது உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.  நாடாளுமன்ற குழுவில் எடியூரப்பா பெயரும் இடம்பெற்றுள்ளது.  கர்நாடக முதலமைச்சர் நாடாளுமன்ற மற்றும் மத்திய தேர்தல் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

புதிய பதவிகள் வழங்குவதன் மூலம் கட்சி எடியூரப்பாவை சமாதானம் செய்ய விரும்புகிறதா என்ற கேள்விக்கு எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சி பணியாற்றுவேன் என்பது கட்சி தலைமைக்கு தெரியும் என கூறியுள்ளார்.

தேர்தல் வியூகம்:

கடந்த மாதம் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையாவின் 75வது பிறந்தநாளைக் கொண்டாட சென்றபோது ராகுல் லிங்காயத்து அமைப்பின் தலைவரை சந்தித்து ஆசிபெற்றார்.  அப்போது லிங்காயத்துகளின் ஆதரவு காங்கிரசுக்கு இருப்பதாக விமர்சனம் எழுந்தது.  சித்தாராமையாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அதிக அளவில் மக்கள் விழா கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

லிங்காயத்துகளின் ஆதரவினைத் திரும்ப பெறுவதற்காகவே எடியூரப்பாவிற்கு நாடாளுமன்ற குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com