
மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் சங்கராச்சாரியரால் தொடங்கப்பட்ட அமைப்பு மற்றும் அதன் துறவிகளின் போதனைகளால் மட்டுமே இந்தியா உயிருடன் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய நாகரிகம் தொன்மையானது மட்டுமல்ல எனவும் பல புதிய சவால்களை உருவாக்கவும் அவற்றை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சங்கராச்சாரியார் என்பது இந்து மதத்தின் அத்வைத வேதாந்த பாரம்பரியத்தில் மடங்களின் தலைவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு மதப் பிரிவு. இந்த நிகழ்ச்சியின் போது தென்னிந்திய கல்விச் சங்கத்தின் பொதுத் தலைமைக்கான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருது அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது.
-நப்பசலையார்