பாஜகவுடன் மீண்டும் இணைகிறாரா நிதிஷ் குமார்?!!

பாஜகவுடன் மீண்டும் இணைகிறாரா நிதிஷ் குமார்?!!

Published on

ஐக்கிய ஜனதா தள எம்பியும், பீகார் மாநிலங்களவை துணைத் தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பாஜகவுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்த நிதிஷ் குமார் முயற்சி செய்து வருவதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

விமர்சனம்:

”நிதீஷ்குமார் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்.  சூழ்நிலை சாதகமாக அமையும் பட்சத்தில், பாஜகவுடன் மீண்டும் நிதிஷ் குமார் கூட்டணி அமைக்க முடியும்” என்று அரசியல் விமர்சகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். 

மேலும் தெரிந்துகொள்க:  வெற்றி பெறுமா மகாகத்பந்தன் 2.0?

நிதிஷ்குமார் பதில்:

இதற்கு பதிலளித்த நிதிஷ், ”இதற்கு நான் என்ன கூற வேண்டும். முட்டாள்தனமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விளம்பரத்துக்காக மட்டுமே இதுபோன்ற கருத்துகளை வெளியிடுகின்றனர். அவர் எந்த கட்சியில் பணியாற்றுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.” என்று பதிலளித்துள்ளார்.  

                                                                                                                                      -நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com