அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் நீட்டிப்பு..?

இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவி காலம் நீட்டிப்பு..?
Published on
Updated on
1 min read
இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகர் மற்றும் இந்திய உச்சநீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர் இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆவார். அவர் மத்திய அரசின் வழக்கறிஞராகவும் செயல்படுவார். தற்போது நாட்டில் 15-வது அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் இருந்து வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட இவரது பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 2022 ஜூன் 30 வரை அடுத்த ஒரு வருட காலத்திற்கு அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது வயது 90 என்பது குறிப்பிடத்தக்கது. 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com