இணைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதன் பாதுகாப்புத்தன்மை இன்றியமையாதது - உள்துறை அமைச்சர் அமித்ஷா

இணைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதன் பாதுகாப்புத்தன்மை இன்றியமையாதது - உள்துறை அமைச்சர் அமித்ஷா
Published on
Updated on
1 min read

இந்தியாவின் இணைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அதன் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்வது இன்றியமையாதது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில், சைபர் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு இணைய பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவது முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் இன்று அனைவரும் தங்களை தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மேம்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், இந்த சாதனையை மேலும் நமக்கு சாதகமானதாக ஆக்க, இணைய பாதுகாப்பு கட்டாயம் என்று பேசினார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் பாதுகாப்பு வசதிகளை ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தி வரும் வேளையில், பொதுமக்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வுகளும் அதிகம் சென்று சேர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com