மேலும், உபரி பட்ஜெட்டைக் கொண்ட மாநிலத்தில், ஏழை குடும்பத்தினர் இன்னும் ரேஷன் கார்டுகள், தங்குமிடம், மருத்துவ வசதி ஆகியவற்றுக்காக காத்திருப்பதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பம் தவிர, வேறு எந்த குடும்பமும் வறுமையிலிருந்து மீளவில்லை என்றும் கூறிய ஷர்மிளா, சந்திரசேகர ராவ் குடும்பம் எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு, செல்வச் செழிப்புடன் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.