80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானிய கப்பல்....!!!

80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானிய கப்பல்....!!!
Published on
Updated on
1 min read

இரண்டாம் உலகப் போரின் போது 1,000 பேருடன் மூழ்கிய ஜப்பானிய போக்குவரத்துக் கப்பல் இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டதாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஆயிரத்து 60 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பலின் சிதைவுகள் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கடந்த 1942ல் இரண்டாம் உலகப் போரின் போது, 'எஸ்.எஸ். மோன்டேவீடியோ மாரு' என்ற ஜப்பானிய பயணியர் கப்பல், பப்புவா நியூ கினியாவில் இருந்து சீனாவின் ஹைனான் நகருக்கு சென்ற போது பிலிப்பைன்ஸ் அருகே அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் அழிக்கப்பட்டது.  கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மமாகவே இருந்த இந்த விவகாரத்தில், பிலிப்பைன்சின் லுாசான் தீவு அருகே கப்பலின் சிதைவுகளை தேடும் பணி கடந்த 6ம் தேதி துவங்கிய நிலையில் தற்போது அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்டுபிடிப்பு குறித்து பேசிய ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், "80 ஆண்டுகளுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலிய குடும்பங்கள் மான்டிவீடியோ மாரு பற்றிய செய்திகளுக்காகக் காத்திருக்கின்றன.  இந்த வாரம், அசாதாரணமான தேடுதல் முயற்சிக்கு பின் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.  கப்பலில் இருந்த 850 ஆஸ்திரேலிய சேவை உறுப்பினர்களை ஒருபோதும் மறக்க முடியாது.  நாங்கள் அவர்களை நினைவில் எப்போதும் நினைவில் வைத்திருப்போம்," என்று அவர் கூறினார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com