பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ...

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களின் ஒன்றான ஜொமோட்டோ இன்று முதல் பங்கு சந்தையில் கால் பதிக்க உள்ளது.
பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ...
Published on: 
Updated on: 
1 min read

பங்குச் சந்தை ஒழுங்கு ஆணையமான செபி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து பங்குச் சந்தையில் ஜொமோட்டோ இன்று முதல் பட்டியலிடப்பட உள்ளது. அதன்படி ஜொமோட்டோ நிறுவனத்தின் 9 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள பங்குகள் இன்று விற்பனைக்கு வருகிறது. அண்மையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பெயர் ஜொமோட்டோ லிமிட்டெட் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தைக்கு வரும் முதல் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமும் ஜொமோட்டோதான். இதற்கு முன்னதாக ஜொமோடோ 186 முதலீட்டாளர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 196 கோடி மதிப்புள்ள ஈக்விட்டி பங்குகள் விற்பனையின் மூலம் திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com