ராகுலுக்கு எதிராக உத்தரவிட்ட நீதிபதி பணியிட மாற்றம்...!

ராகுலுக்கு எதிராக உத்தரவிட்ட நீதிபதி பணியிட மாற்றம்...!
Published on: 
Updated on: 
1 min read

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி தண்டனையை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

சிறந்த நீதி நிர்வாகத்திற்காக பல்வேறு உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த 23 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் வழக்கு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதிகள் சமீர் தவே, கீதா கோபி இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மனுஸ்மிருதியின்படி 17 வயதுக்குள் பெண்களை குழந்தைபெற சமீர்தவே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ராகுலுக்கு எதிராக உத்தரவிட்ட ஹேமந்த், குஜராத் கலவர வழக்கில் பாஜக அமைச்சர் மாயா கோட்னானிக்கு ஆதரவாக வாதாடியதும் குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com