"கர்நாடக தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்படும்" பசவராஜ் பொம்மை!!
கர்நாடக தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகாமாக உள்ளன. பாஜகவின் அமைச்சர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேட்பாளராக நின்றிருந்த ஷிக்கான் தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பிரதமர் மற்றும் பாஜக தொண்டர்கள் பல முயற்சிகள் செய்தும் தங்களால் அந்த அடையாளத்தை உருவாக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவை தேர்தல் முழு முடிவுகள் வந்தவுடன் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் என கூறினார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி அடைவதற்கு அயராது உழைப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க:அரசு மருத்துவர்கள் வருகிற மே 29ஆம் தேதி முதல் போராட்டம்...!