கர்நாடக தேர்தல் பணிகள் தீவிரம்...! முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி..!

கர்நாடக தேர்தல் பணிகள் தீவிரம்...!  முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி..!
Published on
Updated on
1 min read

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்த  நிலையில், தற்போது அடுத்த  கட்ட நடவடிக்கைகளாக தேர்தலுக்கான  ஆயுத்த பணிகள் நடைபெற்றுவருகிறது. வாக்குச்சாவடி மையங்கள் தயாராகி வருகின்றன. மேலும், தீவிர பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தற்போது வாக்கு  செலுத்தும் முறையில் கூடுதல் சிறப்பம்சமாக  முதல் முறையாக முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த நிலையில் இந்த தேர்தலில் 'சுனாவனா' என்ற செயலி மூலம் தங்களது ஆவணங்களை சமர்பித்து அலுவலரின் சோதனையின்றி நேரடியாக வாக்களிக்க மக்கள் அனுமதிக்கப்படுவர். 

இந்த புதிய வசதியை முதற்கட்டமாக இரண்டு சாவடிகளில் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது 
குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com