
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு தரப்பினரும், அதிகப்படியான ஒலிமாசு எழுப்பும் ஒலிப்பெருக்கி பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும் வருகின்றனர்.
கர்நாடகாவில் கலவரத்தை தூண்டும் வகையில் பல்வேறு சமூகத்தினரும் ஏட்டிக்கு போட்டியாக ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இதனை கடுமையாக எச்சரித்துள்ள அம்மாநில உள்துறை அமைச்சர் அராஹா ஞானேந்திரா, நீதிமன்ற உத்தரவுகளை மீறி அதிக ஒலிமாசு எழுப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.