கட்டபஞ்சாயத்து நடத்தும் ஊடகங்கள்....தலைமை நீதிபதி ரமணா ஆதங்கம்....

கட்டபஞ்சாயத்து நடத்தும் ஊடகங்கள்....தலைமை நீதிபதி ரமணா ஆதங்கம்....
Published on
Updated on
1 min read

நீதிபதிகள் மீது உடல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.  நீதிபதிகள் அவர்களால் தண்டிக்கப்பட்ட மக்கள் மத்தியில்  பாதுகாப்பிற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.

ஜார்கண்ட் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்பின்வருமாறு பேசியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் பணிக்கால ஆபத்துகள் காரணமாக அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு முரணாக நீதிபதிகளுக்கு இதேபோன்ற பாதுகாப்பு நீட்டிக்கப்படவில்லை.

ஊடகங்கள் பொறுப்பற்ற, போலித்தனமான, நீதியின் கோட்பாடுகளை புறக்கணிக்கும் அரங்கங்களை நடத்துவதை நாங்கள் காண்கிறோம்.  அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் கூட சில சமயங்களில்  பிரச்சினைகளில் முடிவெடுப்பது கடினமாக உள்ளது.  நீதி வழங்கல் தொடர்பான பிரச்சனைகள் குறித்த தவறான தகவல்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல் விவாதங்கள் ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு தீங்கானது என்பதை இது நிரூபிக்கிறது என ஜார்கண்ட் ராஞ்சியில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com