
ராஜஸ்தான்; கோட்டா மருத்துவக் கல்லூரியில் தனக்கு பதிலாக தன் தந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக மணீஷ் என்ற நபர் புகார்!
ராஜஸ்தானில் உள்ள கோட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மணீஷ் என்ற இளைஞர் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமணியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு யாரும் உதவிக்கு இல்லாததால் தனது துணைக்காக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரின் தந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்., அப்போது தனது தந்தையை அறுவை சிகிச்சை நடைபெறும் அறைக்கு வெளியே அமரச் செய்திருக்கிறார். ஆனால் மணீஷ் -ன் அறுவை சிகிச்சை சனிக்கிழமைக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அவர் வெளியில் வந்து பார்க்கும்போது அதிர்ச்சியில் உறைந்து போனார். மணீஷ் -ன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தை அவரின் உடலில் 5 தையல்களுடன் இருப்பதை கண்டுள்ளார். ஆபரேஷன் நடக்கும் அறைக்குள் இருந்ததால் இவரின் தந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதை புரிந்துகொள்ளவே இவருக்கு சில நிமிடங்கள் ஆகியிருக்கிறது.
மேலும் மனிஷ் கூறுகையில் “எனக்கு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்த மருத்துவர் குழுவில் இருந்தவர்களின் பெயர்கள் கூட எனக்கு தெரியாது. மேலும் நான் அறுவை சிகிச்சை நடைபெறும் அறைக்குள் இருந்தேன். வெளியில் வந்தபோது என் தந்தையின் உடலிலிருந்த தையல்களை வைத்தே புரிந்துகொண்டேன் எனக்கு பதிலாக என் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள்” என்று ‘Times of India’ நாளிதழுக்கு அளித்த செய்தியில் மணீஷ் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கோட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அதிபர் Dr.சங்கீதாவிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கமிட்டி அமைத்து 2,3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்