KSRTC யாருக்கு சொந்தம், கர்நாடக, கேரள மாநிலத்துக்கு இடையே நடந்த வழக்கில் வென்றது யார்? 

KSRTC யாருக்கு சொந்தம், கர்நாடக, கேரள மாநிலத்துக்கு இடையே நடந்த வழக்கில் வென்றது யார்? 
Published on
Updated on
1 min read

தனியார் நிறுவனங்கள் தங்கள் பெயரை அடுத்தவர் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்துக்கு வழக்கு தொடுப்பார்கள். ஆனால் இரண்டு அரசு நிறுவனங்கள் இந்த பெயர் தங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்லி நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார்கள். அதன் தீர்ப்பும் தற்போது வெளிவந்துள்ளது. 

தமிழகத்தின் அரசு போக்குவரத்து கழகத்தை TNSTC என்று அழைப்பார்கள். அதேபோல கேரள அரசு போக்குவரத்துக்கு கழகத்தை KSRTC என்று அழைத்து வருகிறார்கள். இதைப் போலவே கர்நாடக அரசு போக்குவரத்துக்குக் கழகத்தையும் KSRTC என்று அழைத்து வருகிறார்கள். இவர்கள் பேருந்துகளிலும் KSRTC என்ற பெயர் தான் இருந்து வருகிறது. கேரளாவும் கர்நாடகாவும் எல்லை பகுதிகளை பகிர்ந்து கொள்வதால் ,இது பல தருணங்களில் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த குழப்பத்தை தடுக்க KSRTC என்ற பெயருக்கு கர்நாடக அரசு உரிமை கோரியது. இதனால் அதிர்ச்சியுற்ற கேரள அரசு இந்த சம்பவம் தொடர்பாக ட்ரேட் மார்க் கட்டுப்பாட்டு வாரியத்தில் 2014ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பில் கேரளத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இந்த விசாரணையில் கேரளமே முதன்முதலில்  KSRTC பெயரை பயன்படுத்தியது என்றும், அதன் பின்பே கர்நாடக அரசு அதை பயன்படுத்தியது என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் 7 வருடம் நடந்த வழக்கில் கர்நாடகத்தை வீழ்த்தி கேரளம் வெற்றிபெற்றுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com