சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான முடிவு அப்பாவுக்கு கிடைத்த வெற்றி -  தேஜஸ்வி!

சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான முடிவு அப்பாவுக்கு கிடைத்த வெற்றி - தேஜஸ்வி!

பீகாரின் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான முடிவு லாலு பிரசாத்துக்கு கிடைத்த வரலாற்று ரீதியான வெற்றி என ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
Published on

நாட்டில் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கும் நிலையில், சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த பீகாரின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதோடு, அடுத்த ஆண்டுக்குள் ஏற்பாடுகள் முழுமையடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இனி அறிவியல் ரீதியான தரவுகளைக் கொண்டு எந்த சாதிக்கு எவ்வளவு உதவ வேண்டும் என சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என தேஜஸ்வி தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சாதிவாரி கணக்கெடுப்புக்கு குரல் கொடுத்த தனது தந்தைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com