போர் விமானங்களை நெடுஞ்சாலையில் தரை இறக்கும் வசதி தொடக்கம்…   

போர் விமானங்களை நெடுஞ்சாலையில் தரை இறக்கும் வசதி தொடக்கம்…  

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்களை தரையிறக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
Published on

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, ராஜஸ்தான் மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்களை தரையிறக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் என்ற பகுதி, பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில், அவசர காலங்களில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தரை இறக்குவதற்கான ஓடுபாதை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை நெடுஞ்சாலையிலும் இந்த பாதை அமைக்கப்பட உள்ள நிலையில், முதலாவதாக ஜலோரில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் அந்த தடத்தில் விமானத்தில் தரையிறங்கி பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தும் கலந்து கொண்டார். அமைச்சர்கள் வந்த சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் போர் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com