பழைய வாகனத்தை வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: பிரதமர் மோடி

வாகன அழிப்புக் கொள்கை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பழைய வாகனத்தை வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

குஜராத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வாகன அழிப்பு கொள்கையை தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் சுற்றுச்சுழல் மாசை குறைத்து, வளர்ச்சியை விரைவுபடுத்தும் நமது உறுதிப்பாட்டை இந்த கொள்கை பிரதிபலிப்பதாகவும்.,இந்தக் கொள்கை 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டை ஈர்ப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் இயக்கப்படும் 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் தரச் சான்றிதழ் அடிப்படையில் அழிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.அதன்படி, பழைய வாகனங்களை ஒப்படைக்கும் பயனாளர்களுக்கு வாகனத்தின் பதிவு கட்டணம் தவிர்த்து மீதமுள்ள தொகையில் 4 முதல் 6 சதவீதம் வழங்கப்படும் என்றும்,வாகன அழிப்புக் கொள்கையில் பழைய வாகனத்தை ஒப்படைத்து புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 25 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வர்த்தக ரீதியில் உபயோக்கிக்கும் வாகனங்களை ஒப்படைத்து புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சாலை வரியில் 15 சதவீதம் விலக்கு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.பழைய வாகனங்களை அழித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீத தள்ளுபடியை வழங்கும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கொள்கை வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாசு ஏற்படுத்தும் வகையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அரசிடம் உள்ள வாகனங்கள் அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com