
இந்தியாவில் 3 வது அலை பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 499 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 10,273 ஆக குறைந்தது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 24 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் குறைவு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 119 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, 16 ஆயிரத்து 765 பேர் தொற்று நீங்கி குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 07 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 472 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 177 கோடியே 50 லட்சத்து 86 ஆயிரத்து 335 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.