தமிழகத்திற்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள்..

மதுவின் விலையை அதிகரித்ததால் ஆந்திர மதுபிரியர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள்..
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் அரசே மதுக்கடைகளை நடத்தி வருவது போல ஆந்திராவிலும் அரசின் கீழே மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில் ஆந்திர அரசு மதுபானங்களின் விலையை சில தினங்களுக்கு முன்பு 50 சதவீதம் உயர்த்தியது மதுபிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழக ஆந்திர எல்லையில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளில் ஆந்திர மதுபிரியர்கள் மதுவை வாங்குவதுமாக அதனை ஆந்திராவிற்கு கடத்துவதுமாக இருந்துள்ளனர். 

இப்படி செய்து வரும் மதுபிரியர்களினால் ஆந்திர பகுதியில் உள்ள மதுகடைகளில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக யோசித்த அரசு தற்போது மதுபானங்களின் விலையை 50 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து தற்போது 20 சதவீதமாக குறைத்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com