கடவுள் ராமர் தான் நமது நாட்டின் அடையாளம்.... மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்...

கடவுள் ராமர் தான் நமது நாட்டின் அடையாளம்.... மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்...
Published on
Updated on
1 min read

தலைநகர் டெல்லியில் நடந்த ராமநவமி விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசுகையில் கடவுள் ராமர் தான் நம் இந்திய நாட்டின் அடையாளம் எனத் தெரிவித்தார்.

விழாவில் பங்கேற்ற மக்கள் பலர் ராமர் கோவில் கட்டுவது பற்றிய  சந்தேகங்களைக்   கேள்விகளாக   எழுப்பினர். அப்போது சிலர் மருத்துவமனை கட்டலாம் , பள்ளிக்கூடம் அமைக்கலாம் மேலும் சிலர் புதிதாகத் தொழிற்சாலை அமைக்கலாம் தன் சிந்தனையில் தோன்றும் அனைத்து விதமான கேள்விகளையும் கொட்டி தீர்த்தனர். 

இதற்கெல்லாம் பதிலளித்த ராஜ்நாத் சிங் கடவுள் என்பவர் கல் , மரம் , இல்லையென்றால் மண்ணிலே செய்யப்பட்ட பொம்மையோ அல்ல அவர் நமது நாட்டின் நம்பிக்கையாகவும் , கலாச்சாரம் முக்கிய மையாகவும் திகழ்பவர். 

இதனை அடுத்துப் பேசிய மத்திய மந்திரி  ராஜ்நாத்சிங் நாங்கள் மருத்துவமனை , பள்ளிக்கூடம் மற்றும் ஆலைகள் கட்டும் அதே நேரத்தில் கோவில்களையும் கட்டுவோம் எனத் தெரிவித்தார்.

-முருகானந்தம்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com