வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி பொது பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை 203 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த மாதம் மீண்டும் 101 ரூபாய் 50 காசுகள் உயர்ந்தப்பட்டுள்ளது. இதன்படி 19, கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை 101 ரூபாயாக உயர்ந்து ஆயிரத்து 999 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் எவ்வித மாற்றமுமின்றி, 918 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.