‘டைப்பிங் தவறு’ என்ற ஒரே வார்த்தை போதாது... பிளாட் விவகாரத்தில் பில்டருக்கு MahaRERA அதிரடி உத்தரவு

பின்னர் விற்பனை ஒப்பந்தம் தயாரானபோது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது...
MahaRERA Builder Stamp Duty Case
MahaRERA Builder Stamp Duty Case
Published on: 
Updated on: 
2 min read

ஒரு பிளாட் வாங்கும்போது பில்டர் கொடுக்கும் வாக்குறுதிகள் வெறும் வாய்மொழியாக மட்டுமல்லாமல், அலாட்ட்மென்ட் லெட்டர் மற்றும் RERA ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால், பின்னர் அதை மாற்றுவது எளிதான விஷயம் அல்ல என்பதை மகாராஷ்டிராவில் நடந்துள்ள ஒரு வழக்கு காட்டியுள்ளது. சுமார் ரூ.1.6 கோடி செலுத்தி பிளாட் வாங்கிய ஒருவரிடம் முதலில் ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவு கட்டணத்தை பில்டரே ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் விற்பனை ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நேரத்தில் அந்தச் செலவை வாங்குபவரே ஏற்க வேண்டும் என பில்டர் கூறியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் MahaRERA, பில்டர் முன்பு அளித்த ஆவணங்களையே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மார்ச் 11, 2025 அன்று வாங்குபவர் பில்டருடன் அலாட்ட்மென்ட் லெட்டரில் கையெழுத்திட்டு சுமார் ரூ.1.6 கோடியை செலுத்தியிருந்தார். இந்தத் தொகையில் பிளாட் விலையுடன் பராமரிப்பு பாதுகாப்புத் தொகை மற்றும் corpus fund உள்ளிட்ட தொகைகளும் அடங்கியிருந்ததாக MahaRERA பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலாட்ட்மென்ட் லெட்டரில் ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவு கட்டணத்தை பில்டர் ஏற்றுக்கொள்வதாக இருந்ததால், அந்தச் செலவுகள் தமக்கு வராது என வாங்குபவர் புரிந்துகொண்டிருந்தார். ஆனால் பின்னர் விற்பனை ஒப்பந்தம் தயாரானபோது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பில்டர் தரப்பில் கூறப்பட்ட விளக்கம் வேறாக இருந்தது. அலாட்ட்மென்ட் லெட்டரில் ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவு கட்டணம் தாங்கள் செலுத்துவதாக இடம்பெற்றிருந்தது ஒரு ‘டைப்பிங் தவறு’ என்றும், அந்தக் குறிப்பை தவறுதலாக சேர்த்துவிட்டதாகவும் பில்டர் தரப்பு தெரிவித்தது. பின்னர் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் அந்தப் பொறுப்பு வாங்குபவருக்கு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாதத்தை MahaRERA ஏற்கவில்லை. காரணம், அலாட்ட்மென்ட் லெட்டர் மட்டுமின்றி, MahaRERA-விடம் சமர்ப்பிக்கப்பட்ட project disclosure மற்றும் deviation report ஆகிய ஆவணங்களிலும் இதே செலவுகளை பில்டர் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்பாக, பில்டர் MahaRERA இணையதளத்தில் பதிவேற்றிய deviation report-ன் ஒரு பிரிவில், விற்பனை ஒப்பந்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களுக்கான ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவு கட்டணத்தை பில்டரே ஏற்றுக்கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனுடன் இணைக்கப்பட்ட model agreement-லும் அதே அம்சம் இருந்ததாக அதிகாரம் கவனித்தது. பின்னர் தயாரிக்கப்பட்ட amended agreement-ல் அந்த விதி நீக்கப்பட்டிருந்தது. முன்பு வெளியிடப்பட்ட ஆவணங்களுக்கும் பின்னர் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கும் இடையே இருந்த இந்த வேறுபாடு MahaRERA-வின் கவனத்திற்கு வந்தது.

இதனால், திட்டம் தொடர்பாக ஏற்கனவே RERA-விடம் வெளியிட்ட தகவல்களிலிருந்து பில்டர் பின்னர் விலக முடியாது என்று MahaRERA முடிவு செய்தது. அதன்படி, அலாட்ட்மென்ட் லெட்டர் மற்றும் project disclosures-ல் கூறியபடி ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவு கட்டணத்தை பில்டரே ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. வாங்குபவருக்கு இந்த ஆவணங்கள் முக்கிய ஆதாரமாக அமைந்தன.

இந்த வழக்கில் ஸ்டாம்ப் டியூட்டி விவகாரம் மட்டுமல்லாமல், பிளாட் திட்டத்தில் கூறப்பட்ட வசதிகள் தொடர்பாகவும் பிரச்சனை எழுந்தது. திட்டம் ஒரு gated township ஆகவும், உள்ளக சாலைகள் குடியிருப்பாளர்களுக்காக மட்டுமே இருக்கும் என்றும், பொழுதுபோக்கு பயன்பாட்டுக்கான இடம் வாங்குபவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. பின்னர் உள்ளக சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இருந்ததாகவும், recreational ground MSRDC வசம் சென்றதால் அது பொதுமக்களுக்கும் திறந்ததாக மாறியதாகவும் வாங்குபவர் தெரிவித்தார். இதனால் பிளாட்டின் மதிப்பு குறைந்ததாக அவர் வாதிட்டார்.

மேலும், வாங்குபவர் பெரும்பாலான தொகையை செலுத்தியிருந்தபோதும், விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்படாமல் notarise செய்யப்பட்டிருந்தது என்பதையும் MahaRERA கவனித்தது. இதன் அடிப்படையில் RERA சட்டத்தின் Section 13(1)-ன் கீழ் விதிமீறல் ஏற்பட்டதாக அதிகாரம் கூறியது. பில்டர் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருந்ததாக கூறியிருந்தாலும், ஒப்பந்தத்தின் சில அம்சங்கள் தொடர்பான பிரச்சனையே தாமதத்துக்கு காரணம் என விளக்கம் அளித்திருந்தார்.

பிளாட் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கும் வாங்குபவருக்கு வட்டி வழங்க MahaRERA உத்தரவிட்டது. ஜனவரி 1, 2026 முதல் ஏப்ரல் 27, 2026 அன்று Occupation Certificate வழங்கப்பட்ட நாள் வரை, வாங்குபவர் செலுத்திய தொகையின் அடிப்படையில் SBI MCLR-க்கு 2 சதவீதம் கூடுதலான விகிதத்தில் வட்டி கணக்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. வெளியான கணக்கீட்டின்படி இந்த வட்டி சுமார் ரூ.5.4 லட்சமாக இருக்கலாம்.

இதோடு, திட்டத்தில் உள்ள அனைத்து allottee-களையும் உள்ளடக்கிய association அல்லது society-ஐ உருவாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் MahaRERA பில்டருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர் maintenance, corpus fund மற்றும் conveyance deed உள்ளிட்ட RERA தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, வீடு அல்லது பிளாட் வாங்கும்போது அலாட்ட்மென்ட் லெட்டர், project disclosures, deviation report மற்றும் agreement போன்ற ஆவணங்களில் உள்ள ஒவ்வொரு விதியையும் கவனமாகப் படிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக கட்டணம், பதிவு செலவு, ஸ்டாம்ப் டியூட்டி, possession தேதி மற்றும் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட வசதிகள் போன்றவை எழுத்துப்பூர்வமாக எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை வாங்குபவர்கள் சரிபார்ப்பது முக்கியம். ஆவணங்களில் தெளிவாக பதிவு செய்யப்பட்ட தகவல்கள் பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com