மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜகவினர் வாக்குவாதம்

சீன எல்லை விவகாரத்தை தொடர்புபடுத்தி, ஒரு நாய் கூட பிரதமரின் வீட்டில் இறக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியிருந்தார்
மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜகவினர் வாக்குவாதம்
Published on
Updated on
1 min read

மல்லிகார்ஜுன கார்கே

பொதுக்கூட்டத்தில் பிரதமரை இழிவான முறையில் விமர்சித்ததாகக் கூறி எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கோர வேண்டுமென மாநிலங்களவையில் பாஜக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. முன்னதாக பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, சீன எல்லை விவகாரத்தை தொடர்புபடுத்தி, ஒரு நாய் கூட பிரதமரின் வீட்டில் இறக்கவில்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வியெழுப்பிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரதமரை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறினார். தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் இதற்கு ஆதரவளித்து ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதற்கு பதிலளித்த கார்கே, அவைக்கு வெளியே பேசியது குறித்து இங்கு விளக்கமளிக்க முடியாது எனக் கூறினார். ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோர் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த நிலையில், உங்களில் ஒருவராவது அது நேர்ந்திருக்கிறதா எனவும் ஆவேசத்துடன் கேள்வியெழுப்பினார். சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை என தற்போதும் தெரிவிப்பதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com