மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு...சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  உத்தரவு!

மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு...சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  உத்தரவு!
Published on
Updated on
1 min read

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பினர் கடந்த மாதம் 26 ஆம் தேதி கைது செய்தனர். இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, மதுபான கொள்கை ஊழல் முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் இருந்த அவர், ரௌஸ் அவெனியூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை, மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் மூலம், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com