தாய்வழிச் சாதிசான்றிதழ் குறித்து அறிவித்தார் புதுச்சேரி முதலமைச்சர்!

தாய்வழிச் சாதிசான்றிதழ் குறித்து அறிவித்தார் புதுச்சேரி முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

கேரளாவைப் போன்று, புதுச்சேரியிலும் தாய்வழியில் சாதிச் சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் :

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

முதலமைச்சர் அறிவிப்பு:

இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 

  1. முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள 15 ஆயிரம் பேருக்கு, அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
  2. அதேபோன்று, 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும்,
  3. 90 முதல் 100 வயது வரை உள்ளோருக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
  4. அதேபோல், புதுச்சேரியில் உள்ள பழங்குடியின மக்கள் தான் வசிக்கும் பகுதிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித் தரப்படும் எனவும்,
  5. கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழப்போரின் குடும்பத்துக்கான நிவாரணம், 5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
  6. மேலும், கேரளாவைப் போன்று புதுச்சேரியிலும் தாய் வழியில் சாதிச்சான்றிதழ் வழங்க, மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என கூட்ட்த்தொடரில் அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com