வாரிசு, துணிவு டிக்கெட்டை மொத்தமாக வாங்கிய அமைச்சர்கள்...

வாரிசு, துணிவு படத்தின் டிக்கெட்களை அமைச்சரும், அதிகாரிகளும் மொத்தமாக வாங்கி கொண்டதாக கூறி புதுச்சேரி சட்டமன்றத்தை விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.
வாரிசு, துணிவு டிக்கெட்டை மொத்தமாக வாங்கிய அமைச்சர்கள்...
Published on
Updated on
1 min read

புதுச்சேரி | பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியிடப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது.

தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் எங்கு திரும்பினாலும் அஜித்- விஜய் கட் அவுட்டுகள், பேனர்கள் என இருக்கிறது. இதற்கு பால் அபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும் அன்னதானங்கள் கொடுத்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்திற்கான சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மொத்தமாக வாங்கிவிட்டதாக கூறி,  விஜய் ரசிகர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு, முதல்வர் ரங்கசாமியிடம் புகார் அளித்தனர்.

அப்போது கடந்த காலங்கலை போல ரசிகர் மன்றத்திற்கு சிறப்பு காட்சிக்கான டிக்கெட் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியத்தானர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விஜய் ரசிகர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com