எப்ஸ்டீன் உடன் மோடியின் அமைச்சர்.. பாலியல் சீண்டல் நடந்த 'அதே அறையில்' இருந்தாரா? கேள்விகளால் நெருக்கும் எதிர்க்கட்சிகள்!

"இந்த சந்திப்புகளை 'ராஜாந்திர தேவை' எனக் கூறி இந்திய அரசு நியாயப்படுத்த முயலும் என அறிகிறேன். இருப்பினும் இந்த கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதும் எந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்."
Modi’s Minister with Jeffrey Epstein: Opposition Corners Government Over Viral Photos and 'Same Room' Controversy
எப்ஸ்டீன் உடன் மோடியின் அமைச்சர்.. பாலியல் சீண்டல் நடந்த 'அதே அறையில்' இருந்தாரா? கேள்விகளால் நெருக்கும் எதிர்க்கட்சிகள்!
Published on: 
Updated on: 
2 min read

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாலியல் கொடூரன் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் இருக்கும் புகைப்படம் குறித்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

முன்னதாக எப்ஸ்டீனை தான் நேருக்கு நேர் சந்தித்தது இல்லை என்றும் அலுவல் ரீதியாக தூதுக்குழுவின் அங்கமாக மட்டுமே பார்த்திருப்பதாகவும் கூறினார்.

இதனைக் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் தளங்களின் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட், "ஹர்தீப் பூரி, எப்ஸ்டீனை ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை என்று கூறவில்லையா? மோடிக்கு எத்தகைய ஆட்களைப் பிடிக்கும், தன்னைச் சுற்றி எத்தகைய நபர்களை அவர் வைத்திருக்க விரும்புகிறார்? ஆர்.எஸ்.எஸ் மற்றும் வலதுசாரி அமைப்புகளால் ஏன் பெண்களை ஒருபோதும் சமமாக மதிக்கவோ நடத்தவோ முடியாது என்பதற்கு இதற்கு மேல் உங்களுக்கு வேறு ஆதாரம் வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, "எப்ஸ்டீன் பாஜி, தான் ஒரு தூதுக்குழுவின் பகுதியாக எப்ஸ்டீனை 3-4 முறை மட்டுமே சந்தித்ததாக எங்களிடம் கூறினார். இந்த 2 புகைப்படங்களிலும் மற்ற தூதுக்குழுவினர் மேஜைக்கு அடியில் ஒளிந்திருந்தார்கள் என்று நினைக்கிறேன், பாஜி," என கேலியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

"பூரி ஏன் அதே அறையில் இருக்கிறார்" என பாலியல் சீண்டல்கள் நடந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளது இளைஞர் காங்கிரஸ்.

என்சிபி (எஸ்பி) செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டே, "இவைக் கண்டனத்துக்குறிய புகைப்படங்கள். தூதர் தகுதியில் இருந்தாலும் ஜெஃப்ரி எப்ஸ்டீனை ஏன் சந்தித்தார் என்பதை ஹர்தீப் சிங் பூரி விளக்க வேண்டும்.

இந்த சந்திப்புகளை 'ராஜாந்திர தேவை' எனக் கூறி இந்திய அரசு நியாயப்படுத்த முயலும் என அறிகிறேன். இருப்பினும் இந்த கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதும் எந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

தூதர் பூரி அந்த தீவில் நடந்த கொடூரங்கள் பற்றி அறிந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிவசேனா (UBT) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், "மோடிஜி, அமைச்சர் ஹர்தீப் பூரி மட்டும் ஜெஃப்ரி எப்ஸ்டீனைத் தனியாகச் சந்திக்கிறாரா? இந்தச் சந்திப்பில் அவர் யாருடைய செய்தியைக் கொண்டு செல்கிறார்? இது ஆரம்பம்தான், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள்? ஆர்.எஸ்.எஸ் ஆட்சி மாற்றம் நிகழும்! ஜெய் ஹிந்த்!" எனக் கொந்தளித்துள்ளார்.

Modi’s Minister with Jeffrey Epstein: Opposition Corners Government Over Viral Photos and 'Same Room' Controversy
அபிஜித், நேகா விடுதலை; ஞானேஷ் குமாரை நெருக்கும் '4 முனை' அழுத்தம்! CJP, காங்கிரஸ் உடன் இணையும் அடுத்த அணி.. கலக்கத்தில் டெல்லி?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com