
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அழ. வள்ளிப்பாவிற்கு அவரது பிறந்தநாளில் வணக்கங்களை செலுத்துவதாகவும், மிகச் சிறந்த எழுத்தறிவு மற்றும் கவிப்புலமை பெற்றிருந்த அவர், குழந்தைகளிடையே வரலாறு, பண்பாடு மற்றும் இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்தியதற்காக போற்றப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அவரது படைப்புகள் இன்றளவும் பலரையும் ஊக்கப்படுத்தி வருவதாகவும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது நடந்து வரும் ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு மத்தியில், ஹிந்தி திணிப்பை ஆதரிக்கும் பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடியே, தமிழில் ருகுழந்தை கவிஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.