விலைவாசி உயர்வு கோரிக்கை :
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து விவாதம் நடத்தப்படும் என மத்திய அரசு கடந்த 27ம் தேதி தெரிவித்திருந்தது. இது அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதல்கள் தீர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
பெண்கள் பாதுகாப்பு கோரிக்கை:
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டோலா சென் மற்றும் மௌசம் நூர் ஆகியோர் "பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதன் அவசியம்" குறித்து உடனடி விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களவையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ககோலி கோஷ் தஸ்திதாரும் இதே கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்தப் கோரிக்கை குறித்த விவாதம் எழுப்புவதற்காக காங்கிரஸ் அவர்களுடைய பெண் எம்எல்ஏக்களை களமிறக்க வாய்ப்புள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
குஜராத்தின் ஹூச் சோகம் :
குஜராத்தின் பொடாட்டில் 42 பேர் உயிரிழந்த ஹூச் சோகம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் சக்திசிங் கோஹில் மாநிலங்களவையில் விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.