பாதிக்கப்பட்ட நபரின் காலை கழுவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்!

பாதிக்கப்பட்ட நபரின் காலை கழுவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் காலைக் கழுவி விட்டு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மரியாதை செலுத்தியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில், சித்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின நபர் சாலையோரத்தில் அமர்ந்த்திருந்த போது, பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா என்ற நபர், சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவின் இந்த செயலுக்கு பல தரப்புகளில் இருந்து கண்டனங்களும் எதிர்ப்புகளும் வந்த நிலையில், அம்மாநில முதல்வரும், இதற்கு கண்டனம் தெரிவித்து, குற்றம் செய்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதன் பின்னர், சுக்லா மீது வழக்குகள் பதியப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரை, தனது அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அவரை அமர வைத்து, காலை கழுவிவிட்டு, நெற்றியில் திலகமிட்டு, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார், அம்மாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுஹா. மேலும், அவருக்கு நடந்த அந்த சம்பவத்தை கண்டு மனமுடைந்ததாகவும், வருந்துவதாகவும் தெரிவித்து, மன்னிப்புக் கோரியுள்ளார், முதல்வர் சிவராஜ் சிங்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com