நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு - புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்!!

அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவர் . பொது வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு...
நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு - புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சர் இரங்கல்!!
Published on
Updated on
1 min read

நாகாலாந்து மாநில ஆளுநரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மரணத்த்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 8 -ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் தடுக்கி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனாலும் சிகிச்சை பிளான் இன்றி நேற்று மாலை 6.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. திருமணமே செய்த்து கொள்ளாமல் பாஜக -விற்காக உழைத்த இவருக்காக நாடு முழுவதிலிருந்தும் இரங்கல் செய்தி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் 

“அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவர் . பொது வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டவர்.

அன்னாரை பிரித்து வாழும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

இதுபோல் முதலமைச்சர் ரங்கசாமி தனது இரங்கல் செய்தியில், நாகாலாந்து மாநில ஆளுநர் இல கணேசன்  உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இல.கணேசன், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர். நாடாளுமன்ற உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் என தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் தனது திறமைமிக்க ஆளுமையால் பெருமை சேர்த்தவர்.

சிறந்த அரசியல் தலைவராகவும், நல்ல நிர்வாகியாகவும், ஆற்றல் மிகுந்த பேச்சாளராகவும் விளங்கிய அவர், தனது வாழ்வின் பெரும் பகுதியை தேச நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் எளிய மக்களின் நல்வாழ்விற்காகவும் அர்ப்பணித்தவர். அவரது மறைவு தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com