இனிமேல் ரயிலில் முன்பதிவு செய்த கட்டணத்திற்கு "ரீஃபண்ட்" இல்லையா? இது தெரியாம ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யாதீர்கள்!

குறைவான நேரத்தில் ரத்து செய்யப்படும் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கு இனி பணம் திரும்ப அளிக்கப்படாது...
New changes announced by the Railways
New changes announced by the Railways
Published on
Updated on
1 min read

உறுதிசெய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகளுக்கான பணத்தை திரும்பப்பெறும் புதிய விதிகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, ஒரு பயணி தனது உறுதிசெய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டை, புறப்படும் நேரத்திற்கு 24 முதல் 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், ரயில் பயணச்சீட்டு கட்டணத்தில் 25% பிடித்தம் செய்யப்படும். 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டால், பயணச்சீட்டிற்கான பணம் திரும்பத் தரப்படாது என கூறப்பட்டுள்ளது.

இதில் தெரிந்துகொள்ளவேண்டிய புதிய அம்சங்களாவன, உறுதிசெய்யப்பட்ட இரயில் பயணச்சீட்டை, புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்துசெய்தால், நீங்கள் கட்டணத்திற்காக செலுத்திய அதிகபட்சத் தொகை திரும்பக் கிடைக்கும், மேலும் ஒரு பயணிக்கு குறைந்தபட்ச ரத்துக்கட்டணம் மட்டுமே பிடிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்தால், குறைந்தபட்ச கட்டணத்திற்கு உட்பட்டு 25% பிடித்தம் செய்யப்படும். புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்குள் இரயில் டிக்கட்டினை ரத்து செய்யப்பட்டால், குறைந்தபட்ச கட்டணத்திற்கு உட்பட்டு, பயணக் கட்டணத்தில் 50% கழிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் உங்கள் உறுதிசெய்யப்பட்ட இரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் திரும்ப அளிக்கப்படமாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிமுறைகளானது, செயல்பாடுகளை மேம்படுத்துதல், பயணச்சீட்டு வெளிப்படைத்தன்மை மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்திய ரயில்வே அதை செயல்படுத்தத் தயாராகி வருவதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டிக்கெட் ரத்து செய்வது தொடர்பாக ஒரு முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ரத்து செய்யப்படும் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கு இனி பணம் திரும்ப அளிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கடைசி நேர ரத்துகளைக் குறைக்கவும், மற்ற பயணிகளுக்கு இருக்கைகள் கிடைப்பதை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1ல் இருந்து 15க்குள் படிப்படியாக அமலுக்கு வரும் என்று தகவல் வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com