புதுச்சேரி: புத்தாண்டுக்கு கடலில் இறங்க அனுமதி இல்லையா? காவல்துறை சொல்வது என்ன?

புதுச்சேரி: புத்தாண்டுக்கு கடலில் இறங்க அனுமதி இல்லையா? காவல்துறை சொல்வது என்ன?
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, பொதுமக்கள் கடலுக்கு செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

புத்தாண்டு கொண்டாட்டம்:

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக,  ஏராளமான சுற்றுலாப் பயணிகள், புதுச்சேரி செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல்வேறு வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பொதுமக்கள் யாரும் கடலில் இறங்காத வகையில், கடற்கரை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை போலீசார் தடுத்தி நிறுத்தி அனுப்பி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பிற்பகல் 2 மணியிலிருந்து புதுச்சேரி கடற்கரைக்கு செல்லும் ஒயிட் டவுன் பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை பாரதிதாசன் கல்லூரி, இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நிறுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com