அமெரிக்கா செல்கிறார் நிர்மலா சீதாராமன்...!!

அமெரிக்கா செல்கிறார் நிர்மலா சீதாராமன்...!!

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா செல்கிறார்.

அதன்படி 6 நாள் பயணத்தை இன்று தொடங்கும் அவர், உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா மற்றும் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் ஆகியோரையும் தனித்தனியே சந்தித்திக்கவுள்ளார்.

அதேபோல், அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் இலன், ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூசிலாந்து, எகிப்து, ஜெர்மனி, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் நிர்மலா ஈடுபடவுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com