எந்த அணிக்கும் தலைமை ஏற்க போவதில்லை... சரத் பவார் விளக்கம்...

எந்த அணிக்கும் தலைமை ஏற்க போவதில்லை... சரத் பவார் விளக்கம்...

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணிக்கும் தலைமையேற்கும் எண்ணம் இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். 
Published on

பிரபல தேர்தல்  வியூக நிபுணர்  பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து அண்மையில்  ஆலோசனை நடத்தினார். பிரசாந்த் கிஷோரின் இந்த சந்திப்பு இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள சரத் பவார்,  ஜனாதிபதி வேட்பாளராக தான் முன்னிறுத்தப்பட  உள்ளதாக கூறப்படும் தகவல் தவறானது என்றும்  2024- பாராளுமன்ற தேர்தல் குறித்தோ, ஜனாதிபதி தேர்தல் குறித்தோ எதுவும் பேசவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த சந்திப்பில் பிரஷாந்த் கிஷோரின் கம்பெனி ஒன்று குறித்து மட்டுமே பேசியதாகவும் விளக்கம் அளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com