என் 4 ஆண்டுகால ஆட்சியில் எந்த வன்முறையும் நடக்கவில்லை: பெருமையாக சொல்லும் யோகி ஆதித்யநாத்...

உத்தர பிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளில் எந்த வன்முறையும் இல்லை என முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
என் 4 ஆண்டுகால ஆட்சியில் எந்த வன்முறையும் நடக்கவில்லை: பெருமையாக சொல்லும் யோகி ஆதித்யநாத்...
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசின் 4.5 ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், இந்த காலகட்டத்தில் எளிமையாக வர்த்தகம் செய்வதில் தேசிய அளவிலான தரவரிசையில் உத்தர பிரதேசம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்போது, 4.5 ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டில் உத்தர பிரதேசத்தின் மீதுள்ள பார்வை மாறியுள்ளது. இதே மாநிலத்தில் முந்தின காலகட்டத்தில், வன்முறை என்பது ஒரு டிரெண்டாக இருந்து வந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் எந்த வன்முறையும் இல்லை என பெருமிதமுடன் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com