தண்ணீர் கேட்டு தவித்த என்.எஸ்.டி.எல். நிர்வாக இயக்குனருக்கு ஓடிச்சென்று குடிநீர் வழங்கிய மத்திய அமைச்சர்!

தண்ணீர் கேட்டு தவித்த என்.எஸ்.டி.எல். நிர்வாக இயக்குனருக்கு ஓடிச்சென்று குடிநீர் வழங்கிய மத்திய அமைச்சர்!
Published on
Updated on
1 min read

உரைக்கு இடையே தண்ணீர் கேட்டு சமிக்ஞை செய்த தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓடிச்சென்று தண்ணீர் வழங்கிய செயல் பாராட்டை பெற்றுள்ளது.

தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகை நிறுவனத்தின் 25வது ஆண்டு தினம் மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்தநிலையில் நிகழ்ச்சியில் சிறைப்புரையாற்றியபோது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்துருவுக்கு தாகம் ஏற்படவே, அதுபற்றி ஊழியர்களுக்கு சமிக்ஞை செய்துவிட்டு பேச்சை தொடர்ந்துள்ளார்.

இதனை கவனித்த நிர்மலா சீதாராமன், உடனடியாக தன்முன் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வழங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com