பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்த சிறுவன்… தாய் குத்தி கொலை..  

பக்கத்து வீட்டு வாசலில் சிறுவன் சிறுநீர் கழித்ததற்காக அவரது தாயை அந்த வீட்டார் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்த சிறுவன்… தாய் குத்தி கொலை..   
Published on
Updated on
1 min read

பக்கத்து வீட்டு வாசலில் சிறுவன் சிறுநீர் கழித்ததற்காக அவரது தாயை அந்த வீட்டார் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

வடகிழக்கு டெல்லியின் அமன் விஹாரில் என்னும் பகுதியில் தான் இந்த கொடூரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 4 வயது சிறுவன் ஒருவன் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததற்காக அச்சிறுவனின் தாய்க்கும் பக்கத்து வீட்டு காரர்களுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தால் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். ஆனால் இப்பிரச்சனையை அத்துடன் விட்டுவிடாமல் பக்கத்து வீட்டை சேர்ந்த மைனர் சிறுவன் ஒருவன் சிறுநீர் கழித்த சிறுவனின் தாய் ராணாவை இரவு 11 மணி அளவில் முகச்சவரம் செய்யும் ரேசரை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளான். இதில் ராணா ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் பக்கத்து வீட்டு சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com