ஒரே நாடு!!ஒரே பிராண்ட்!!

ஒரே நாடு!!ஒரே பிராண்ட்!!
Published on
Updated on
1 min read

அனைத்து உர நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை ஒரே பிராண்டின் கீழ் விற்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவை காங்கிரஸ் கண்டித்துள்ளது.  

அதை "ஒரு நாடு, ஒரு மனிதன், ஒரு உரம்" என்று விமர்சித்துள்ளது காங்கிரஸ்.  நாடு முழுவதும் உர பிராண்டுகளில் ஒரே சீரான தன்மையைக் கொண்டுவரும் முயற்சியில், அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை 'பாரத்' என்ற ஒரே பிராண்டின் கீழ் விற்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுயவிளம்பரத்திற்காக சர்வவியாபி செய்யும் எதுவும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டியதில்லை. சமீபகாலமாக அனைத்து உரங்களையும் ஒரே பிராண்டின் கீழ் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது, அதுவும் PM-BJP ன் ஒரு பகுதியாக" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com