

இந்தியாவில் 'டேட்டிங் ஆப்' உபயோகிக்கும் பலரும் திருமணம் ஆனவர்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தரவுகளை 'க்ளீடன்' ஆப் ஒன்று வெளியிட்டுள்ளது. 'டேட்டிங் ஆப்' உபயோகிக்கும் பலருக்கும் திருமணம் ஆகி அவர்கள் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பது அதிகரித்துள்ளதாகவும் அது வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் திருமணம் புனிதமான ஒன்றாக பார்க்கப்பட்டாலும், இந்த காலத்தில் அப்படி இல்லை என்பதை இந்த செயலி படமிட்டு காட்டியுள்ளது. ரகசியமான திருமணத்திற்குப் புறம்பான டேட்டிங் செயலி ஒன்று, அதன் பயனர்களை நாட்டில் அதிகாரப்பூர்வமாக நாற்பது லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த இரண்டு பெண் பயனர்களின் எண்ணிக்கை 148 சதவீதம் அதிகரித்துள்ளது.
க்ளீடன் என்பது திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு டேட்டிங் செயலியாகும். டிண்டர் ஆப் போன்ற ஆப்களை போலவே, இதுவும் காதல் அல்லது பாலியல் உறவுகளைத் தேடும் நபர்களை ஒன்றிணைக்கிறது. இருப்பினும், இந்த இடத்தில்தான் இந்த ஆப் வேறுபட்டு உள்ளது. இது ஏற்கனவே திருமணமானவர்கள் அல்லது உறுதியான உறவுகளில் இருப்பவர்களை வெளிப்படையாகவே வேறு ஒருவருடன் உறவு வைத்துக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆப், பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நாட்டில் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கடந்துள்ளதாகவும், அதன் பயனர் தளத்தில் 270 சதவிகித அதிகரிப்பைக் குறிப்பதாகவும் அது கூறுகிறது.
இந்த டேட்டிங் தளங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள், 18% பயனர்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் (17%), டெல்லி (11%), மும்பை (9%), மற்றும் புனே (7%) ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்று வெளிப்படையாகவே கூறுகிறது.
இதுகுறித்து, க்ளீடனின் இந்திய நாட்டு மேலாளரான சிபில் ஷிடெல், "3 மில்லியன் பயனர்கள் என்ற மைல்கல்லைக் கடந்திருப்பது, நாட்டில் உறவுகள் குறித்த மாறிவரும் கண்ணோட்டங்களைப் பிரதிபலிக்கிறது" என்று கூறினார். மேலும், பெண்களின் அதிகரித்து வரும் பங்கேற்பை அவர் சுட்டிக்காட்டினார், இதுமட்டுமின்றி, பாதுகாப்பு, ரகசியம் மற்றும் தேர்வுச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். க்ளீடனின் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், இந்தப் பயனர்கள் யார்? மற்றும் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? என்பது குறித்த ஒரு ஆழமான பார்வையை வழங்கின. மேலும், இந்த ஆப் பயனர்களில் 65% பேர் ஆண்கள், 35% பேர் பெண்கள். பெரும்பாலானோர் திருமணமானவர்கள் அல்லது நீண்டகால உறவுகளில் இருப்பவர்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களின் பங்களிப்பு 148% அதிகரித்து, கணிசமாக உயர்ந்துள்ளது என்று இந்த தரவு கூறுகிறது. மேலும், இந்தியர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 1 முதல் 1.5 மணிநேரம் இந்தச் செயலிகளில் உரையாடுகின்றனர். குறிப்பாகப் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரையிலும் இவர்களின் உரையாடல் அதிகப்படியான பயனர்கள் இந்த ஆப்பில் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. இதுபோன்ற திருமணத்தை மீறிய உறவுகளில் இருப்பவர்களுக்கான இந்த ஆப்பின் அதிக பயனர்களை இந்தியா கொண்டிப்பிருப்பதாக இந்த க்ளீடன் ஆப் தெரிவித்திருக்கிறது. தற்போது இந்த தரவுகளின் அறிக்கை உறவுமுறைகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.