மணீஷ் சிசோடியா கைது விவகாரம்...பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்...!

மணீஷ் சிசோடியா கைது விவகாரம்...பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்...!
Published on
Updated on
1 min read

இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது என பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில்  இந்தியா ஜனநாயக நாடு என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.. இந்தியாவில் மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது எனவும், அரசியல் ஆதாயத்துக்காக இது நடக்கிறது எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  தேர்தல் நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது எனவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரே, ஃபரூக் அப்துல்லா, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தேஜஸ்வி யாதவ் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com