ஓவைசியின் பிரதமர் விருப்பமும் பாஜகவின் கிண்டல் நிறைந்த பதிலும்..!!!

ஓவைசியின் பிரதமர் விருப்பமும் பாஜகவின் கிண்டல் நிறைந்த பதிலும்..!!!
Published on
Updated on
1 min read

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி  இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பிறகு, ஹிஜாப் அணிந்த பெண்ணை இந்தியப் பிரதமராகப் பார்க்க விரும்புவதாக கிண்டலாகக் கூறியிருந்தார். 

ஓவைசியின் விருப்பம்:

“எனக்கு முன்னரோ அல்லது எனக்குப் பின்னரோ ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறியிருந்தார் ஒவைசி.

பதிலளித்த பாஜக:

ஒவைசியின் விருப்பத்திற்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஜத் பூனவல்லா,”ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று ஒவைசி நம்புகிறார்! அரசியலமைப்பு இதை தடை செய்யவில்லை. ஆனால் அதற்கு முன் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் AIMIM இன் தலைவராக எப்போது வருவார் என்று சொல்லுங்கள்? நாம் முதலில் அங்கிருந்து ஆரம்பிக்கலாம்.” என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com