pakistan hacked
pakistan hacked

இந்தியாவின் மீது இணைய போர் தொடுத்த பாகிஸ்தான்..!? ராணுவ வீரர்களின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டதா??

பாகிஸ்தானிய ஹேக்கர் குழுவான 'பாகிஸ்தான் சைபர் படை' இந்திய பாதுகாப்பு இணையதளங்களை ஹேக் செய்து முக்கியமான தகவல்களை திருடியதாகக் கூறப்படுகிறது. ...
Published on

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகல்கம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு விளங்கும் லஷ்கர் -இ -தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான ‘the resident front” என்ற அமைப்புதான் காரணம் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர்  பதற்றம் உருவாகி சர்வதேச பிரச்சனையாக இது உருவெடுத்துள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் பொருட்டு சிந்து நதி நீர் ஒப்பந்தந்தை முறித்துக்கொண்டது. ஏற்கனவே சிந்து நதி நீர் நிறுத்தினால், இது போருக்கு வழிவகுக்கும் என பாகிஸ்தான் குறிப்பிட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் அப்போது இந்தியாவின் பாதுகாப்பு தளங்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.

‘பாகிஸ்தான் சைபர் படை’

பாகிஸ்தானிய ஹேக்கர் குழுவான 'பாகிஸ்தான் சைபர் படை' இந்திய பாதுகாப்பு இணையதளங்களை ஹேக் செய்து முக்கியமான தகவல்களை திருடியதாகக் கூறப்படுகிறது. இந்த குழு, இந்திய இராணுவத்தின்  பொறியியல் சேவைகள், மனோஹர் பரிக்கர் பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின்  இணையதளங்களை ஹேக் செய்ததாகக் கூறுகிறது.பாகிஸ்தான் அரசு 2024 ஆம் ஆண்டு மே 3 அன்று "National Cyber Crime Investigation Agency" (NCCIA) என்ற புதிய அமைப்பை நிறுவியது குறிப்பிடத்தக்கது.இந்தக் குற்றச்சாட்டின் படி, ஹேக்கர்கள் பாதுகாப்பு வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை, குறிப்பாக உள்நுழைவு சான்றிதழ்களை, திருடியதாகக் கூறப்படுகிறது.  'Transparent Tribe' என்ற ஹேக்கிங் குழுவை பயன்படுத்தி பாதுகாப்பு பணியாளர்களின் கணினி மற்றும் மொபைல் சாதனங்களில் மால்வேர் மென்பொருளை அனுப்பி தகவல்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்நிலையில்இந்திய பாதுகாப்பு அமைப்புகள், இந்த தாக்குதல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com