350 கிலோ ஹெராயினுடன் சென்ற பாகிஸ்தான் படகு...

குஜராத்தில் பாகிஸ்தான் படகு கைதாகிய நிலையில், அதில், 350 கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
350 கிலோ ஹெராயினுடன் சென்ற பாகிஸ்தான் படகு...
Published on
Updated on
1 min read

இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS), இன்று, குஜராத் மாநிலக் கடற்கரையில் பாகிஸ்தான் படகில் இருந்து ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தன.

குஜராத் அருகே 350 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் கொண்ட பாகிஸ்தானியப் படகை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியது.

சர்வதேச எல்லைக் கோட்டுக்கு அருகே குஜராத் கடற்படையுடன் சேர்ந்து இந்திய கடலோர காவல்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.

அப்போது  6 பேருடன் சென்ற பாகிஸ்தானியப் படகை சோதனை செய்த அதிகாரிகள், அதில் கட்டுக் கட்டாக ஹெராயின் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

தொடர்ந்து படகு கைப்பற்றப்பட்டு சோதனைக்காக, குஜராத்தில் உள்ள ஜகாவு துரைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாதம், இதே போல அல் தாய்சா (Al Tayyasa) என்ற 6 பேர் கொண்ட பாகிஸ்தான் படகில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான 40 கிலோ ஹெராயின்   இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com