நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்..? அவைகளை முடக்க எதிர்க்கட்சிகள் புது வியூகம்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நான்காவது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்..? அவைகளை முடக்க எதிர்க்கட்சிகள் புது வியூகம்...
Published on
Updated on
1 min read

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டன.

குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. எனினும், நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் செயல்பட்டாலும் உறுப்பினர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும்.  குளிர்கால கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்ற வளாகம் மற்றும் பாராளுமன்ற பிரதான கட்டிடத்திற்குள் நுழைபவர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும்,

கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். 2024 பொதுத் தேர்தல் அரையிறுதியாகக் கருதப்படும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com