"சிங்கப்பூர் தீ விபத்தில் சிக்கிய" - துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன்

"டோமேடா குக்கிங் ஸ்கூல்" என்ற தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், இன்று அங்கு பயங்கர
pawan kalyan
pawan kalyan
Published on
Updated on
1 min read

தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான "பவன் கல்யாண்" தெலுங்கு சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும் வளம் வருகிறார், தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக உள்ளார்.

இவருடைய இளைய மகன் "மார்க் ஷங்கர்" சிங்கப்பூரில் இயங்கி வரும் "டோமேடா குக்கிங் ஸ்கூல்" என்ற தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், இன்று அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அதில் பதினைந்து குழந்தைகளுக்கும் நான்கு பெரியவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பவன் கல்யாண் அவர்களின், மகனுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இன்று இருந்த முக்கிய அமர்வுகளை ரத்து செய்த பவன் கல்யாண் விசாகப்பட்டினம் சென்று, தனியார் விமானத்தின் மூலம் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார், மார்க் ஷங்கர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com