காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் கொரோனா சந்தேகத்திற்குரியவர்... புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு...

காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ள அனைவரும் கொரோனா சந்தேக நபராகவே கருதப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் கொரோனா சந்தேகத்திற்குரியவர்... புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு...
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவில் தோன்றி கொரோனா தொற்றின் புதிய வகை மாறுபாடான ஒமிக்ரான் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி ஒமிக்ரான் மொத்த பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்பாட்டுத்தும் நடவடிக்கையாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய ஆர்.ஏ.டி. எனப்படும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் சாவடிகளை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதார ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருமல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுத் திணறல், உடல்வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றுடன் காய்ச்சலும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் கொரோனா சந்தேக நபராகவே கருதப்படுவார்கள் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com