காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம்... காவல் ஆய்வாளர் சுட்டுகொலை...

காஷ்மீரில் காவல் ஆய்வாளர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டகாசம்... காவல் ஆய்வாளர் சுட்டுகொலை...
Published on: 
Updated on: 
1 min read
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான கனிபோராவை சேர்ந்தவர் பர்வைஸ் அஹ்மத் தார். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிஐடி பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், நவ்காமில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்த போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு நாட்களில் காவல் அதிகாரி பர்வைஸ் அஹ்மத் தார் மீது ஏற்கெனெவே ஒரு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில் இது இரண்டாவது தாக்குதல் என கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதல் நடந்த நவ்காம் பக்குதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com